நஹ்ஜுல் பலாகா

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

நூல் அறிமுகம்

ஸயீத் ராஸி எனபவரால் தொகுக்கப்பட்டு ‘ நஹ்ஜுல் பலாகா ‘ என நாமமிடப்பட்டுள்ள இந் நூல் ஹஸ்ரத் அலி ( அலை ) அவர்களது நல்லுபதேசங்கள் , போதனைகள் , கடிதங்கள் ஆணைகள் மற்றும் சில பொன்மொழிகள் என்பவற்றின் மொழிபெயர்ப்பாகும்.

ஹஸரத் அலி ( அலை ) அவர்களது இந்த நல்லுபதேசங்களும் போதனைகளும் இஸ்லாமிய உலகின் மிகப் பெறுமதி மிக்கதாகவும் பெரும் மதிப்புக்கு உரியதாகவும் கருதப்படுகின்றது . அன்னாரின் மறைவின் பின்னர் ஒரு நூற்றாண்டுக்குள் அவை , ஏகத்துவ தத்துவங்களின் இறுதி வாக்கியமாகவும் , சிறந்த குண இயல்புகளை உருவாக்கும் சொற் பொழிவுகளாகவும் உளத் தூண்டலுக்கு உந்து சக்தியாகவும் பக்தி மார்க்கத்துக்கான தூண்டுதலை அளிக்கும் நல்லுபதேசங்களாகவும் உண்மை நியாயம் என்பவற்றுக்கான வழிகாட்டும் ஒளி விளக்காகவும் இறை தூதர் ( ஸல் ) அவர்களையும் புனித குர்ஆனையும் புகழ்ந்துறைக்கும் பொக்கிஷங்களாகவும் இஸ்லாமிய ஆன்மீக மாண்புகளின் தெளிவான விளக்கங்களாகவும் இறைவனின் நற்பண்புகள் பற்றிய பயபக்தியை தூண்டும் கலந்துரையாடலாகவும் உன்னதமான இலக்கியமாகவும் சொல் இலக்கணவியலின் மாதிரியாகவும் கொள்ளப்பட்டு கற்பிக்கப்பட்டும் , வாசிக்கப்பட்டும் வருகின்றது.

01 ) ஆஃஹிரத

1.         மனிதர்களே ! நிச்சயமாக இவ்வுலகம் அழிந்து விடுவதுளூ மறுவுலகமே நிலையானது எனவே , உங்களது அழிந்து விடுவதிலிருந்து உங்களது நிலையானதற்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் . உங்களது இரகசியங்களை அறிந்தவர்களிடத்தில் உங்களது திரைகளைக் கிழித்துவிடாதீர்கள் .

2.         தன் மறுமை விடயங்களை சீர்செய்து கொள்பவருக்கு, அவருடய இம்மை விடயங்களை அல்லாஹ் சீர் செய்து கொடுக்கின்றான் .

3.         எவர் மறுமையைத் தேடுகின்றாரோ, அவர் இவ்வுலகத்திலிருந்து முழுமையாக எடுத்துக் கொள்ளும் வரை அது அவரைத் தேடிக் கொண்டிருக்கும் .

4.         ( உலகில் வாழுகின்ற ) முதற்கட்ட வாழ்வை அவதானித்துக் கொண்டே, ( மறுமையில் வாழுகின்ற ) அடுத்த கட்ட வாழ்வை நிராகிப்பவர்களைப் பார்த்து நான் வியப்புகின்றேன் . அவ்வாறே , அழிந்து போகும் இவ்வுலக வாழ்வை நிர்மாணிப்பவர்களையும் நிரந்தரமான மறுமை வாழ்வை புறக்கணிப்பவர்களையும் பார்த்து நான் வியம்புகின்றேன் .

5.         தனக்கு உபதேசம் புரியுமாறு கேட்ட ஒரு மனிதருக்கு இமாம் அலி ( அலை ) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் : ளூ அமல் தவிர்ந்த ஏனையவற்றின் மூலம் மறுமையை தேடுவோனாக நீ இராதே ளூ

6.         இமாம் ஹஸன் ( அலை ) அவர்களுக்கான இறுதி உபதேசத்தில் இமாம் அலி ( அலை ) அவர்கள் கூறினார்கள் : ளூ எனது அன்பு மகனே ! நிச்சயமாக நீ படைக்கப் பட்டிருப்பது மறுமைக்காகவே ளூ இமமைக்காக அல்ல . மரணத்துக்காகவே ளூ தொடர் வாழ்க்கைக்காக அல்ல ளூ

7.         இவ்வுலகின் கசப்பு மறுமையின் இன்சுவையாகம் . இவ்வுலகின் இன்சுவை மறுமையின் கசப்பாகும் .

8.         இவ்வுலகின் நாசங்களையும் மறுமையின் நிர்மாணிப்பையும் அல்லாஹ் இணைக்காது தடுத்துள்ளான் .

9.         மறுமையை இலக்காக கொண்டவராக துயிலெழுபவர் பணமின்றியே செல்வந்தராகிடுவார் ளூ உறவினர்களின்றியே மனிதாபிமானமுறுவார் ளூ குடும்பத்தினர் இன்றியே கணிணியம் பெறுவார் .

10.        இவ்வுலகம் , செல்வங்களைக் கொண்டானது ளூ மறுமை , செயல்களைக் கொண்டானது .

11.        மறுமையின் வியாபாரப் பொருட்கள் செலவு செய்யப் படாதவை ளூ எனவே , அவற்றின் பாத்திரங்களிலிருந்து அதிகப்படுத்திக் கொள் .

12.        உண்மையில் சீதேவித் தனம் என்;ற சொல்லுக்குத் தகுதியானது மறுமையின் சீதேவித்தனமாகும் . அது நான்கு வகையாது ளூ அழிவற்ற நிரந்தரம் , மடமையற்ற அறிவு , இயலாமையற்ற வல்லமை , வறுமையற்ற செல்வம் .

13.        தன் மறுமை விடயங்களை சீர் செய்து கொள்பவருக்கு அல்லாஹ் அவரது இவ்வுலக விடயங்களை சீர் செய்து கொடுக்கின்றான் .

14.        மறுமை சீதேவித் தனமுடையோரின் வெற்றியமாகும் .

15.        இவ்வுலகைக் கொண்டு மறுமையை வாங்கியவரே சிறந்த இலாபதாரர் .

16.        செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்வின் அலங்காரங்கள் ளூ நல்லமல்கள் மறுமையின் விளைச்சல்கள் .

17.        இவ்வுலக விவகாரங்கள் கருத் தொற்றுமையின் வழி நடக்கின்றன . மறுமையின் பங்குகளோ தகுதியின் வழி நடக்கின்றன .

18.        இவ்வலகம் முன்வைக்கப்பட்டுள்ள வியாபாரப் பொருளாகும் ளூ அதிலிருந்து நல்லவர்களும் தீயவர்களும் உண்பார்கள் . மறுமை உண்மையின் இல்லமாகும் ளூ அதில் வல்லமை பொருந்திய அரசனே ஆட்சி செலுத்துவான் .

19.        இவ்வுலகின் ஏமாற்றுகளால் மறுமைக்காக அமல் செய்வதிலிருந்து தடுக்குப் படாதிருப்பவரே உறுதியானவராவார் .

20.        மறுமை உங்களது நிலையான இருப்பிடம் ளூ எனவே , உங்களுக்கு இயலுமான வரை அதற்கென தயார் செய்து கொள்ளுங்கள் .

21.        இறுதிப் பயணம் நெருங்கு முன்னர் மறுமைக்கான கடடுச்சாதங்களை ஆயத்தம் செய்து கொள்ளுங்கள் .

22.        மறுமையில் மிகவும் செல்வந்தர்களாக இருப்பவர்கள் இம்மையில் மிகவும் வறியவர்களாக இருந்தவர்களே .

23.        இன்றைய நாளில் , செயல் மட்டுமே ளூ கேள்வி இல்லை . நாளை , கேள்வி மட்டுமே ளூ செயல் இல்லை .

24.        நிச்சயமாக நீ மறுமைக்காகவே படைக்கப்பட்டுள்ளாய் ளூ ஆகவே , அதற்காக செயல்புரி .

25.        தயார்படுத்தல்களில் சிறந்தது மறுமையை சீர் செய்யகஒத்தின் வலியைப் போக்கிவிடும் .

26.        நிலையான மறுமையின் வீடு , உண்மையாளர்களின் ஸ்தலமாகும் ளூ நல்லடியார்களினதும் இறைநேசர்களினதும் தாயகமாகும் .

27.        இவ்வுலகைத் தவிர்ப்பதன் மூலம் மறுமையைப் பெற்றுக் கொள்ளுங்கள் ளூ மார்க்கத்தை தவிர்ப்பதன் மூலம் இவ்வுலகைப் பெற்றுக் கொள்ளாதீர்கள் .

28.        மறுமை நினைவு , மருந்தும் நிவாரணமுமாகும் .

29.        மறுமையைத் தேடுபவன் தன் எதிர்பார்ப்பை அடைந்து கொள்வான் ளூ தவிரவும் , இவ்வுலகில் அவனுக்கென ஏற்படுத்தப்பட்டவை அனைத்தும் அவனை வந்தடையும் .

30.        மறுமையின் இறுதியென்பது நிரந்தரமாகும் .

31.        மறுமையில் உள்ள ஒவ்வொரு விடயமும் , யதார்த்தத்தில் செவியுற்றுள்ளதை விடவும் பிரமாண்டமானதாகும் .

32.        இவ்வுலகில் உனது உடலைக் கொண்டிரு ளூ மறுமையில் உனது உள்ளத்தையும் செயலையும் கொண்டிரு .

33.        மறுமையில் உறுதியான நம்பிக்கை கொண்டவர் இவ்வுலகின் மீது பேராசையுறமாட்டார் .

34.        தனது இவ்வுலகைக் கொண்டு மறுமையை வாங்குபவர் இரண்டிலும் இலாபம் பெறுவார் .

35.        இவ்வுலகுக்காக மறுமையை விற்பவர் இரண்டிலும் நஷ்டமடைவார் .

36.        மறுமையை சீர் செய்து கொள்பவர் உறுதியான வெற்றியைப் பெறுவார் .

37.        மறுமையின் அருட் கொடைகளில் ஆசை கொள்பவர் இவ்வுலகின் எளிமையைப் போதுமாக்கிக் கொள்வார்.

38.        மறுமையை இலட்சியமாகக் கொண்டவர் தனது எண்ணத்தின் உச்ச நிலைப் பயன்பாட்டை அடைந்து கொள்வார் .

39.        மறுமையில் குறைந்தாலேயன்றி இம்மையில் அதிகரிப்பதில்லை .

40.        மறுமையில் எவ்விதப் பங்குமற்றிருப்பவரின் நிலை எவ்வளவு கைசேதம் !

41.        உலகில் தாம் பேராசையுறுபவற்றைத் தவிர்த்தாலேயன்றி , மறுமையில் தாம் விரும்பும் எதையும் எவரும் பெற்றுக் கொள்வதில்லை .

42.        அழியும் இவ்வுலகை அறிந்து கொள்பவர் , நிலையான மறுவுலகுக்காக செயல்புரிவது அவசியமாகும் .

02 ) இஜ்திஹாத்

01 . தமது முயற்சியை அடைந்து கொள்ளும்படி உபதேசம் புரிவதும் உண்மையை நிலை நிறுத்துவதற்கு உதவி புரிவதும் அடியார்கள் மீதுள்ள அல்லாஹ்வுக்கான கடமைகளில் உள்ளவைனாகும் .

02 . ஓர் இமாமின் மீது , அவரது இறைவன் கடமையாக்கியுள்ள ( பின்வரும் ) விடயங்களைத் தவிர்த்து வேறெதுவும் கடமையில்லை : மார்க்க ஒழுக்கங்களை பிரசாரம் செய்வது , நல்லுபதேசத்தில் முயற்சிப்பது , சுன்னத்தை உயிர்ப்பிப்பது , சட்டங்களை அதற்குத் தகுதியானவர்கள் மீது நிலை நிறுத்துவது , சொத்துக்களை அவற்றுக் குரியவர்கள் மீது வெளிப்படுத்துவது .

03 . உஸ்மான் இப்னு ஹுனைபுக்கு இமாம் அலி ( அலை ) அவர்கள் கூறினார்கள் : ளூ நிச்சயமாக உங்களது இமாம் உலகில் கந்தல் ஆடையைப் போதுமாக்கிக் கொண்டார் . காய்ந்த ரொட்டித் துண்டுகளை உணவாக்கிக் கொண்டார் . அறிந்து கொள்ளுங்கள் , இவ்வாறு நடந்து கொள்ள உங்களால் முடியாது. எனினும் பேணுதல் , முயற்சி , கற்பொழுக்கம் , மனோவுறுதி முதலானவற்றில் என்னைப் பின்பற்றிக் கொள்ளுங்கள் ளூ

04 .  பாவங்களை விடுபவரே கடுமையான இஜ்திஹாத் உள்ள மனிதராவார்  .

05 . இஜதிஹாத் மிக இலாபம் தரும் விடயமாகும் .

06 . இஜ்திஹாதுக்காக செயல் புரிபவர் , தன் விருப்பத்தை அடைந்து கொள்வார் .

07 . உன்னை சீர் திருத்திக் கொள்வதில் இஜ்திஹாதை ( முயற்சியை ) விட்டுவிடாதே ளூ நிச்சயமாக , அவ்விடயத்தில் முயற்சியைத் தவிர வேறெதுவும் உனக்குதவாது .

03 ) அஜல

1 . மனிதனுடைய அஜல ; ( ஆயுள் முடிவு ) அவனுக்கு மறைவானது ளூ அவனது எதிர்பார்ப்பு அவனை ஏமாற்றிவிடக் கூடியது .

2 . நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுடனும் அவனைப் பாதுகாக்கும் இரு மலக்குகள் இருப்பர் . அவனது முடிவு வந்து விட்டால் , அவனுக்கும் அதற்குமிடையிலிருந்து அவர்கள் விலகிவிடுவர் . நிச்சயமாக அஜல் ( முடிவு ) பாதுகாப்பான கேடயமாகும் .

3 . தனது எதிரப்பார்ப்பின் ஒழுங்கில் நடந்து கொள்பவர் , தனது முடிவின் போது தவறிழைப்பவர் .

4 . ஏழையானவன் மனிதன் ளூ அவன் தன் இறுதி முடிவு மறைக்கபட்டவன் , குறைகளால் போர்த்தப்பட்டவன் , அமல்கள் பாதுகாக்கப்பட்டவன் . மூட்டைப் பூச்சியும் அவனை வேதனைப்படுத்துகின்றது , நோய்கள் அவனைக் கொன்று விடுகின்றன ளூ வியர்வை அவனை துர்வாடையுடையவனாக்குகின்றது .

5 . அடியான் தன் இறுதி முடிவையும் அதன் பாதையையும் அறிந்து கொள்வானானால் , தன் எதிர்ப்புக்கள் , அவற்றின் ஏமாற்றுக்கள் மீது மிகுந்த கோபமுறுவான் .

6 . அல்லாஹ்வின் நேசர்கள் என்போர் , மனிதர்கள் உலகத்தில் புற நிலையைக் கவனித்துக் கொண்டிருபக்கையில், அதன் அக நிலையை அவதானித்துக் கொடிருப்பர் ளூ மனிதர்கள் இவ்வுலக விடயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் , அவர்கள் மறுமை விடயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பர் .

7 . நிச்சயமாக நீ உனது எதிர்பார்ப்புகளை அடைய முடியாது , உனது முடிவை மீற முடியாது என்பதை உறுதியாக அறிந்து கொள் .

8 . நிச்சயமாக நீ உனது முடிவை முந்திவிபவனாக இல்லை ளூ உனக்குரியதல்லாத உணவு வழங்கப்படுபவனாகவும் இல்லை .

9 . நற் செயலை தீவிரப்படுத்திக் கொள்ளுங்கள் ளூ இறுதி முடிவின் அதிர்வைப் பயந்து கொள்ளுங்கள் .

10. அல்லாஹ் , ஒவ்வொரு விடயத்துக்கும் ஓர் அளவை ஏற்படுத்தியுள்ளான் ளூ ஒவ்வோர் அளவுக்கும் ஒரு முடிவையும் ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு ஏட்டையுதம் அமைத்துள்ளான் .

11 . ஒவ்வெரு முடிவுக்கும் , மீற முடியாத எல்லையும் தாண்ட முடியாத காரணம் இருக்கின்றன .

12 . மறுமைக்காக தீவிரப்படுங்கள் ளூ முடிவுகளை முந்திக் கொள்ளுங்கள் ளூ நிச்சயமாக மனிதர்கள் , எதிர்பார்ப்பு தம்மிலிருந்து களையப்படுவதையும் முடிவு தம்மை அச்சுறுத்துவதையும் முறையிடுவார்கள் . அச்சமயத்தில் அவர்களுக்கான தௌபாவின் வாசல் அடைக்கப்பட்டிருக்கும் .

13 . பேராசையாளனுக்கு இறுதி முடிவு போதுமானதாகும் .

14 . ஒவ்வொரு வாழ்க்கைக்கும் முடிவு இருக்கிறது .

15 . மனிதனின் மூச்சு , அவனது இறுதி முடிவை நோக்கிய காலடிகளாகும் .

16 . ‘ உணவும் ( ரிஸ்க் ) , இறுதி முடிவு எப்படியானவை ? ‘ என்று கேட்கப்பட்ட போது , இமாம் அலி ( அலை ) அவர்கள் கூறினார்கள் : ‘ நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உனக்குச் சேரவேண்டிய ரிஸ்க் இருக்கிறது . உன்னிடத்தில் அல்லாஹ்வுக்குச் சேரவேண்டிய முடிவு இருக்கிறது . அல்லாஹ் தன்னிடமுள்ள உனக்குரியதை உனக்குத் தந்தால் , உன்னிடத்திலுள்ள தனக்குரிய தான் எடுத்துக் கொள்வான் ‘ .

17 . தன் இறுதி முடிவை விளங்கிக் கொள்பவரின் எதிர்பார்ப்புகள் குறைவடையும் .

18 . குடும்ப உறவை இணைந்து வாழ்வது செல்வத்தை வளப்படுத்துவதும் இறுதி முடிவை தள்ளிவைப்பதுமாகும் .

19 . மனிதன் பாவங்களினால் மரணிப்பது , இறுதி முடிவினால் மரணிப்பதை விடவும் அதிகமானது .

20 . இறுதி முடிவு , போராடிக் கொண்டிருக்கிறது .

21 . இறுதி முடிவு , ஒரு கேடயமாகும் .

22 . இறுதி முடிவு , பாதுகாப்பான கோட்டையாகும் .

23 . இறுதி முடிவுகள் , எதிர்பார்ப்புகளை அறுத்துவிடும் .

24 . இறுதி முடிவு , எதிர்பார்ப்பை இழிவுபடுத்தும் .

25 . இறுதி முடிவு , எதிர்பார்ப்பின் அறுவடையாகம் .

26 . அறிந்து கொள்ளுங்கள் : நீங்கள் எதிர்பார்ப்புடைய தினங்களில் இருக்கின்றீர்கள் ளூ அதற்குப் பின்னால் இறுதி முடிவு இருக்கிறது . எவர் தனது இறுதி முடிவு வருமுன் தனது எதிர்பார்ப்புடைய தினங்களில் நற்செயல் புரிகின்றாரோ , அவருக்கு அவரது செயல் பயனளிக்கும் ளூ அவரது முடிவு அவரைப் பாதிக்காது . எவர் தனது இறுதி முடிவு வருமுன் தனது எதிர்பார்ப்புடைய தினங்களில் நற்செயல்களைக் குறைத்துக் கொள்கின்றாரோ அவரது செயல் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் ளூ அவரது முடிவும் அவரைப் பாதிக்கும் .

27 . மிகவும் நெருக்கமான விடயம் இறுதி முடிவாகும் .

28 . மிகவும் உண்மையான விடயம் இறுதி முடிவாகும் .

29 . எதிர்பார்ப்புகளின் உச்சத்தை நீங்கள் அடைந்தால் இறுதி முடிவுகளின் பயங்கரத்தை ஞாபகியுங்கள் .

30 . எதிர்பாப்புகளின் ஆபத்து இறுதி முடிவுகளின் வருகையாகும் .

31 . இறுதி முடிவுகளின் வருகையின் போது எதிர்ப்புகளின் அழிவு வெளிப்படும் .

32 . இறுதி முடிவுகளின் தாக்குதலின் போது எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் இழிவுபெறும்.

33 . ஒவ்வொரு முடிவுக்கும் வருகை இருக்கிறது .

34 . இறுதி முடிவின் நெருக்கத்தையும் வருகையையும் பற்றி நீங்கள் சிந்தித்தால் , வாழ்க்கையின் சுவையும் மகிழ்ச்சியும் உங்களுக்கு மிகக் கசப்பானதாக இருக்கும் .

35 . இறுதி முடிவுகளில் நேரங்களின் அழிவு இருக்கிறது .

36 . இறுதி முடிவு என்பது சிறந்த மருந்தாகும் .

37 . இறுதி முடிவை விட பலமான கேடயம் இல்லை .

04 ) இஹ்ஸான்

1 . நன்மை செய்வதன் மூலம் உன் சகோதரனை எதிர்கொள் ; கொடை கொடுப்பதன் மூலம் அவனது தீமைகளைத் தவிர்த்துக் கொள் .

2 . மனிதன் தனது நற்செயல்களின் மூலம் பின்பற்றப்படுபவன் ; தனது திரைகளின் மூலம் ஏமாற்றப்படுபவன் ; தன்னிலுள்ள நல்ல பேச்சின் மூலம் சோதிக்கப்படுபவன் . இவற்றை நிரப்பிக் கொடுப்பது போன்ற எதன் மூலமும் அல்லாஹ் எவரையும் சோதிப்பதில்லை .

3 . உனக்கு எவ்வாறு நன்மை செய்யப்பட வேண்டுமென்று விரும்புகின்றாயோ , அவ்வாறு மற்றவர்களுக்கு நீ நன்மை செய் .

4 . நன்மையான விடயங்கள் மீதுள்ளதை விட பலமானவனாக தீமையானவற்றில் நீ ஆகிவிட வேண்டாம் .